தலையைக் குலுக்கல்

சொல் பொருள்

தலையைக் குலுக்கல் – மறுத்தல்

சொல் பொருள் விளக்கம்

தலையாட்டுதலுக்கு எதிரிடையானது தலையைக் குலுக்குதலாம். தலையாட்டல் என்பது ஒப்புகை, தலையைக் குலுக்கல் என்பது மறுதலிக்கை. ஆட்டுதல் என்பது ஒரு முறை இரு முறை தலையசைத்தலாக அமையும். குலுக்கல் பல்கால் அசைத்தலாக இருக்கும்.‘ஊம்’ என்பது ஏற்றுக்கொள்ளலையும் ‘ஊகூம்’ என்பது ஏற்றுக்கொள்ளாது மறுத்தலாக இருப்பதையும் அறிக. “தலையாட்டிக்கெட்ட நீ இப்பொழுது ஏன் குலுக்குகிறாய்” என்பதில் ஆட்டல் குலுக்கல் இரண்டன் பொருளும் தெளிவாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.