சொல் பொருள்

(வி) துளி, சொட்டு, 2. (பெ) 1. மழைத்துளி, 2. முதல் மழை, 3. மேகம்

சொல் பொருள் விளக்கம்

துளி, சொட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

drip, trickle, rain drop, first shower of rain in a season, cloud

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1

நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி

தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4

தன்னை(மேகத்தை)ப் பாடிய, மழைத்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக

தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3

தான் வந்தது முதல்மழையைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம்

தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16

மேகத்தினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.