தழீஇய

தழீஇய என்பதன் பொருள்தழுவிய(embraced)

1. சொல் பொருள் விளக்கம்

(வி.எ) தழுவிய என்ற வினையெச்சத்தின் மரூஉ

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

the twisted form the word ‘thazhuviya’ meaning embraced

3. ஆங்கிலம்தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169

தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78

கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை - பெரும் 127

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் - முல் 24

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய

கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் - மது 337

உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் - மலை 526

மட பிடி தழீஇய தட கை வேழம் - நற் 202/4

தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய/துறுகல் அயல தூ மணல் அடைகரை - நற் 243/1,2

மட பிணை தழீஇய மா எருத்து இரலை - நற் 256/8

மகளிர் தழீஇய துணங்கையானும் - குறு 31/2

வால் இழை மகளிர் தழீஇய சென்ற - குறு 45/2

அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய/நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய - குறு 237/1,2

தண் மழை தழீஇய மா மலை நாட - ஐங் 292/2

மட பிடி தழீஇய மாவே - ஐங் 416/4

பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு - பதி 21/25

புன்புலம் தழீஇய புறவு அணி வைப்பும் - பதி 30/25

தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை - அகம் 34/7

தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் - அகம் 84/14

பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய/திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த - அகம் 89/12,13

நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் - அகம் 177/17

மடவோள் தழீஇய விறலோன் மார்பில் - அகம் 197/11

கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு - அகம் 197/13

எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய/விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும் - அகம் 239/5,6

புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி - அகம் 284/7

பெருநீர் கானல் தழீஇய இருக்கை - அகம் 269/21

சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - அகம் 304/8

பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் - அகம் 309/2

உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி - அகம் 353/11

உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை - அகம் 398/23

சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - புறம் 23/19

சுரை தழீஇய இரும் காழொடு - புறம் 97/6

நெடு நிரை தழீஇய மீளியாளர் - புறம் 260/13

பல் ஆ தழீஇய கல்லா வல் வில் - புறம் 261/11

பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் - புறம் 269/10

குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர் - புறம் 294/3

புன்புலம் தழீஇய அம் குடி சீறூர் - புறம் 324/8

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.