சொல் பொருள்
தாட்டு – தாட்பாளைப் போடு
பூட்டு – பூட்டைப் போடு
சொல் பொருள் விளக்கம்
சொருகு கம்பியோ கோலோ உடையது தாட்பாள்; அவற்றைப் போடுவது தாட்டு கொண்டி போடுவதும் தாட்டேயாம். பூட்டுப் போட்டுப் பூட்டுவது பூட்டு எனப்பட்டது. “என்ன நீ தாட்டுப் பூட்டு என்று குதித்தால் விட்டுவிடுவேனா?” என்பது வழக்கு. தாட்டுப் பூட்டு என்பவை தடுத்து அடைத்து வைத்துவிடுவதாக அச்சுறுத்தலாம். சிறை வைத்தல் அது என்க
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்