சொல் பொருள்
(பெ) 1. அரிய பண்டம், 2. மந்தாரம், தேவதாருமரம்,
சொல் பொருள் விளக்கம்
1. அரிய பண்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rare / valuable thing or article
A celestial tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 512,513 (தானியங்களை)இடித்துக் கலந்துசெய்த(பொரிவிளங்காய்)உருண்டை போன்ற,(ஆனால்) மணம்மிக்க வடு மாங்காயின் தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும், தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/6 தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்