சொல் பொருள்
(பெ) 1. அங்குசம், தார்க்கோல், 2. பூ அல்லது காய்களின் கொத்து, குலை
சொல் பொருள் விளக்கம்
1. அங்குசம், தார்க்கோல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
goad
cluster of flowers or vegetables
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி – குறி 150 (பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி தாறு படு பீரம் ஊதி – நற் 277/7 கொத்துக்கொத்தாய்ப் பூக்கும் பீர்க்கின் மஞ்சள் நிறப் பூவில் தேன்குடித்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்