சொல் பொருள்
(பெ) ஒரு கொடி,
தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல் என்பர் பழைய உரைகாரர்
சொல் பொருள் விளக்கம்
தாளியடித்தல் என்பது சங்கநூல் ஆட்சி. பயிர்களின் செறிவைக் குறைக்கப் பலகு என்னும் சட்டத்தை ஓட்டுதல் பலகடிப்பு எனப்படும். அது பல் பல்லாக இருக்கும் கருவி. பலகடிப்பைத் தாளியடித்தல் என்பர் பழைய உரைகாரர். பலகடித்தல் என்பது பல்லியாடல் என்பது பழ வழக்கு. நெல்லை வழக்கு இது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Hedge bind-weed, Ipomaca sepiaria
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3 தாளியின் குளிர்ந்த படர்கொடியைக் காலையில் பசுக்கள் மேயும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்