சொல் பொருள்
திண்டு – ஓரிடத்தில் உயர்ந்து தோன்றும் கல் அல்லது கற்பாறை.
திரடு – தொடராக மேடுபட்டுக் கிடக்கும் மண்ணும் கரடும்.
சொல் பொருள் விளக்கம்
ஓரிடத்து மேட்டையும் தொடர் மேட்டையும் குறிக்கும். ‘திண்டு திரடு’ என்பது இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் ஆகியவற்றில் ஓர் ஒழுங்கற்று மேடு பள்ளம் மொத்தை கற்றை என அமைந்த அமைப்பைக் குறித்து வருவதாயிற்று.
“துணி திண்டும் திரடுமாக இருக்கிறது” என்பதும் வழக்கே. ‘திண்டு’ என்பது மெத்தை திண்ணை முதலிய சொற்களுடன் ஒப்பீட்டுக் காணத்தக்கதாம். ‘திண்டுக்கல்’ என்னும் பெயரையும் கருதுக. ஊரூர்க்கு திரடுகள் இல்லாமல் இல்லையே! திரள் திரளை, திரட்டு என்பவற்றில் திரடு என்பதன் பொருள் வெளிப்படுமே.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்