சொல் பொருள்
திண்டு – மனத்தில் இரக்கமில்லாத, பாறைக் கல் போன்ற தன்மை
முண்டு – முட்டி மோதும் தன்மை.
சொல் பொருள் விளக்கம்
‘திண்டு முண்டுக் காரன்’ என்பதில் வரும் திண்டும் முண்டும் இப்பொருளவாம். இனித் ‘திண்டுக்கு முண்டு’ என்பதும் உண்டு. பாறைக்கல் போல ஒருவன் இருந்தால் அவனையும் முட்டித் தாக்குபவனைத் திண்டுக்கு முண்டன்’ என்பதும் உண்டு. திண்டு முரட்டுத்தனத்தையும் முண்டு மோதுதல் அல்லது முட்டுதலையும் குறிப்பனவாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்