சொல் பொருள்
(வி) 1. அலைந்துதிரி, 2. சுழல், 3. சுற்று, 4. நடமாடு, வழங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. அலைந்துதிரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roam about, wander, whirl, go round, rotate, be in use
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35 முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு அலைந்துதிரிய உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 1,2 உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து சுற்றிவரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, மோரியர் பொன் புனை திகிரி திரிதர குறைத்த அறை இறந்து – அகம் 69/10-12 மோரியரின் பொன்னால் செய்யப்பட்ட சக்கரங்கள் உருள்வதற்காக வெட்டிப் பாதையாக்கப்பட்ட குன்றங்களைக் கடந்து நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17 நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்