சொல் பொருள்
திருகல் – வளைதல்
முறுகல் – முதிர்தல் அல்லது முற்றுதல்.
சொல் பொருள் விளக்கம்
“மரம் திருகல் முறுகலாக இருக்கிறது” என்பது வழக்கு. திருகுதல் வளைதல், கோணுதல் என்னும் பொருளது. தென்னுதல் என்பதும் அது. மிக முற்றிய மரம். பக்குக் கிளம்பியும் வெடிப்பு பொந்து ஆகியவை ஏற்பட்டும் இருக்கும். வாள், வாய்ச்சி, உளி கொண்டு வேலை செய்தற்குத் திருகல் முறுகலாக இருக்கும் மரங்கள் இடரானவை. மாந்தருள் சிலர் இயல்பும் திருகல் முறுகலாக அமைந்து விடுவதுண்டு. அவர்களைத் “திருகல் முறுகலானவர்கள்” என ஒன்றாமல் ஒதுங்கி போவது கண்கூடு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்