சொல் பொருள்
(பெ) 1. திரையால் மறைத்த இடம், 2. தன்னுள் அடக்குதல்,
சொல் பொருள் விளக்கம்
1. திரையால் மறைத்த இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Place screened by a curtain
covering, containing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/19,20 முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரைமறைவில் திருமணமும் இங்கே நடத்துவர், நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே – பதி 91/10 நிலத்தைத் தன்னுள் அடக்கியதைப் போன்ற படையினையுடையவனாகிய உனக்கே.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்