திரையைக் கிழித்தல்

சொல் பொருள்

திரையைக் கிழித்தல் – வெளிப்படுத்துதல்

சொல் பொருள் விளக்கம்

திரையாவது மறைப்பு, வீட்டு வாயில் திரை, சாளரத் திரை, கோயில் திரை, நாடக மேடைத் திரை இவையெல்லாம் மறைவுகளும் மறைப்புகளுமாம். ஆள்களுக்கும் துணித்திரை (முகத்திரை) உண்டு. அதனைக் குறியாமல், உள்ளத்தே மறைத்துள்ள தீய செய்திகளை வெளிப்படுத்துதல் இத்திரையைக் கிழித்தலாம். பொய்யை மெய்யாக நடிப்பதையும் ஏமாற்றுவதையும் வெளிப்படுத்திக் காட்ட விரும்புவர். “எவ்வளவுதான் உன்னால் மறைக்க முடியும்? கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள்! பார் உன் திரையைக் கிழித்துக் காட்டுகிறேன்” என்று எச்சரிக்கை விடுப்பர். இவண் திரை கிழித்தல் என்பது வெளிப்படுத்துதல் பொருளதாம். முகத்திரையை விலகுதல் என்பதும் இப்பொருளதே.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.