சொல் பொருள்
தில்லு – வலிமை உடல் வலிமை கொழுப்பெடுத்த தன்மை
முல்லு – தேவையில்லாமல் முட்டி மோதல்
சொல் பொருள் விளக்கம்
“உனக்கு தில்லு இருந்தால் வந்து மோதிப்பார்” என்பதில் ‘தில்’ என்பதற்கு வலிமைப் பொருள் உள்ளமை புலப்படும்.
உடல் வலிமையை மூலதனமாகக் கொண்டு ஊரையே-ஒரு கூட்டத்தையே-அச்சப்படுத்துவார் உண்டு. அவரை ‘தில்லு முல்லுக்காரன்’ என்பர்.
காரணம் இல்லாமலே, தானே ஒரு காரணத்தைப் படைத்துக் கொண்டு வம்புக்கு இழுத்து, வலியச் சண்டை செய்து, வாரிக் கொள்வதே வழக்கமாகிப் போன முரட்டுப் பிறவியர் அவர். அவர்க்கும் முரடர் இல்லாமலா போவர்? ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்பது பழமொழி. அத்தகையவர் தில்லுமுல்லுக்காரனைப் பார்த்து ‘உன் வேலையை இங்கு காட்டாதே வேறிடத்தில் வைத்துக் கொள்’ என்பர். தில்லும், முல்லும் ஆள் பார்த்தே மோதும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்