Skip to content

சொல் பொருள்

(இ.சொ) 1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.

சொல் பொருள் விளக்கம்

1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

particle signifying a desire, time or a suggestion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே – குறு 14/2,3

நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுவேனாக நானே!

பெற்றாங்கு
அறிக தில் அம்ம இ ஊரே – குறு 14/3,4

பெற்ற பின்பு
அறியட்டும் இந்த ஊரே!

வருக தில் அம்ம எம் சேரி சேர- அகம் 276/7

வருவானாக, எம் சேரிக்கண் பொருந்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.