சொல் பொருள்
வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க ‘மை’ போடுவது வழக்கம். ‘மசகு’ என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர்.
சொல் பொருள் விளக்கம்
வண்டிச் சக்கரத்தில் தேய்மானம், ஒலி முதலியவை இல்லாமல் பாதுகாக்க ‘மை’ போடுவது வழக்கம். ‘மசகு’ என்பது முகவை வழக்கு. திருச்செங்கோடு வட்டாரத்தில் மை என்பதைத் தீந்து என்கின்றனர். வைக்கோலை எரித்துக் கரியாக்கி அக் கரியில் எண்ணெய் விட்டக் குழப்பிப் பயன்படுத்துவர். ஆதலால், அவ்வினைப்பாடு கொண்டு ‘தீந்து’ என வழங்கப்படுவதாயிற்று.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்