Skip to content

சொல் பொருள்

(வி) 1. செலவாகிப்போ,கரைந்துவிடு, 2. இல்லாமல்போ, 3. முடிவுக்கு வா, முற்றுப்பெறு, 4. கழி,  5. (பசி,களைப்பு முதலியன) நீங்கு, 6. விட்டுச்செல், அகல், 7. அறுதிசெய், நிச்சயி, 8. போக்கு, 9. முடிவுக்கு வரச்செய்

சொல் பொருள் விளக்கம்

1. செலவாகிப்போ,கரைந்துவிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be used up, exhausted, be non existent, absent, be completed, be spent, pass, freed of, leave, quit, be decided, determined, clear, remove, finish, complete

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என – புறம் 333/9,10

வரகும், தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை எல்லாம்
இரவலர் உண்டதனாலும், கொண்டதனாலும் செலவாகிப்போய்விட்டனவாக

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70

திருமகள் வீற்றிருந்த குறைகள் இல்லாமற்போன அங்காடித் தெருவினையும்

துறை பல முற்றிய பை தீர் பாணரொடு – மலை 40

துறைகள் பலவற்றையும் கற்றுத்தேர்ந்த இளநிலை முடிந்த (=அனுபவமிக்க) பாணர்களோடு

கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை – பரி 19/9

புணர்ச்சியின்பத்தோடு பொருந்திய இரவு முடிந்த எல்லையாகிய அதிகாலையிலே

கண்ணின் நோக்கி
முனியாது ஆட பெறின் இவள்
பனியும் தீர்குவள் செல்க என்றோளே – நற் 53/9-11

கண்ணுக்கினிய காட்சிகளைக் கண்டு
வெறுப்பின்றி நீராடினால், இவளின்
நடுக்கமும் நீங்கும், செல்வீர்களாக என்ற நம் அன்னை

இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3

தன் இனத்திடமிருந்து பிரிந்துவந்த பருந்தின் தனிமைத்துயரைக் காட்டும் தெளிந்த அழைப்பொலி

ஈர நன் மொழி தீர கூறி – குறி 234

கனிவான நல்ல மொழிகளை நிச்சயித்துக் கூறி,

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே – நற் 216/1,2

ஊடலைப் போக்கிக் கூடலுடன் பொருந்தி என்னை நெருங்காராயினும்,
இனியதே

அரும் துயர் அவலம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே – நற் 140/10,11

நமது நீக்கமுடியாத அரிய துயரத்தின் அவலத்தை முடிக்கும்
மருந்து வேறு இல்லை, நான் உற்ற நோய்க்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *