சொல் பொருள்
துண்டு – நெடிய பாவில் இருந்து துண்டு போடுவது-துண்டு துண்டாக அறுத்து அமைப்பது துண்டு;
துணி – அத்துண்டையும் சிறிது சிறிதாக அறுத்து ஆக்குவது துணி. துணியிலும் சிறியது துணுக்கு.
சொல் பொருள் விளக்கம்
துண்டு துணுக்கு என்பதும் உண்டு. துணி, துணிப்பதால் (துண்டாக்குதலால்) பெற்ற பெயர். அத்துணித்துண்டு போலவே ஒரு கூட்டத்தில் இருந்து பிரிந்து அவர் செய்தற்கு அரிய செயலை செய்வாரே ஆனால், அவர் ‘துணிவானர்’ எனப்படுவார். கூட்டத்தில் இருந்து துணிந்து (பிரிந்து) செயலாற்றியமையால் துணிவு. துணிவாளர் என்பவை உண்டாயின. “எண்ணித் துணிக கருமம்” வள்ளுவம் துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது பழமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்