சொல் பொருள்
(பெ) 1. வலி, 2. பவளம், 3. பகைமை, 4. போர்த்துறை,
‘துப்புக் கெட்டவன்’ என்பது ‘அறிவு கெட்டவன்’ என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
‘துப்புக் கெட்டவன்’ என்பது ‘அறிவு கெட்டவன்’ என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. துப்பு வலிமை; அது துய்க்கும் உணவால் உண்டாவது பற்றிய ஆட்சி. அறிவு கெட்டவன் என்பது, ‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்பதன் வழியதாகலாம். மானம், தவம், குலம், கல்வி எனப் பலவும் பசிவந்திடப் போம் என்பதொரு தனிப்பாடல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
vigour, strength, valour, red coral, enmity, warfare
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நட்பு கொளல் வேண்டி நயந்திசினோரும் துப்பு கொளல் வேண்டிய துணையிலோரும் – பெரும் 425,426 நட்புக் கொள்ளுதலை வேண்டி விரும்பினவர்களும், (அவன்)வலியை(த் துணையாக)க்கொள்ளக் கருதிய வேறோர் உதவியில்லாதவர்களும் அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர் – ஐங் 273/1 நெடுவழியில் உள்ள அசோகின் பவளம் போன்ற ஒளிவிடும் தளிரை அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் பகைவர் நாடும் கண்டு வந்திசினே – பதி 15/14,15 தமது அறியாமையால் மறந்து உன் பகைமையினை எதிர்கொண்ட உன் பகைவரின் நாடுகளையும் பார்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறேன் துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே – பதி 62/9 போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்