துயல்வரு(தல்)

சொல் பொருள்

(வி) முன்னும் பின்னுமாக ஆடுதல்,

சொல் பொருள் விளக்கம்

முன்னும் பின்னுமாக ஆடுதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

swing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

1. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு கீழே தொங்குகின்ற ஒரு பொருள்,
அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்

சிறு குழை துயல்வரும் காதின் – பெரும் 161

சிறிய குழை அசைகின்ற காதினையும்

யானை வேகமாக நடக்கும்போது, அதன் முகத்தில் அணியப்பெற்றிருக்கும் முகபடாம்
எழுந்தும் வீழ்ந்தும் அசைதல்.

வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
——————————————
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 79-82

வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
————————————————————
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையும் உடைய)களிற்றில் ஏறி

2. ஓர் ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு மேலே நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு பொருள்,
அசைவின்போது முன்னும் பின்னுமாக ஆடுதல்

வளி பொர துயல்வரும் தளி பொழி மலரின் – அகம் 146/10

காற்று மோதுதலால் அசையும் மழை பெய்யப்பட்ட மலரைப் போல

நோன் கழை துயல்வரும் வெதிரத்து – புறம் 277/5

வலிய கழை அசைந்தாடும் மூங்கிற் புதரின் கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.