Skip to content

சொல் பொருள்

(வி) 1. துழாவு, கிளறு, அளை,  2. அளாவு,  3. ஒன்றைக் கண்டுபிடிக்க பார்வையை அங்குமிங்கும் செலுத்து

சொல் பொருள் விளக்கம்

1. துழாவு, கிளறு, அளை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stir well, as with a ladle, mix and stir, cast a searching look into, seek

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கூவல் துழந்த தடம் தாள் நாரை – பதி 51/4

பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை

கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8

பொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய்யை அளாவவிட்டுச் சமைத்த
கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில்

ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர
நீ தோன்றினையே – புறம் 174/21-23

நல்ல நெறியினைக் கொண்ட பக்கத்தினையுடைய திசையெங்கும் பார்வையைச் செலுத்தும்
கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம்கெட
நீ வந்து தோன்றினாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “துழ”

  1. வேவீவே சூரியநாராயணன்

    சங்கத் தமிழ் செய்யுள் பாடலின் வரிகள், சொற்களுக்கு சரியான பதம்/பொருள் கொண்ட சொற்களை துழாவும்போது உங்களுடைய பக்கம் நீங்கள் மேலே குறிப்பிட்ட இறுதிப்பாடலின்படி கவலை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் மிகுந்த நன்றியும் உரித்தாக்குகிறேன். உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *