Skip to content
துழவை

துழவை என்பது குழைசோறு

1. சொல் பொருள்

(பெ) 1. குழைசோறு, 2. துழாவிச் சமைத்த கூழ், 3. டகுகளை உந்தித் தள்ள பயன்படும் கருவி 4. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படும் தட்டையான அகப்பை

2. சொல் பொருள் விளக்கம்

துழாவு என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததுதான் துழவை. துடுப்பை வைத்துத் துழாவிச் செய்வது களி. இந்தக் களியே சற்று இளக்கமாக இருந்தால் அது துழவை. குற்றாத முழு அரிசியையே குழைய வேகவைக்கிறாள் பெண்ணொருத்தி. இவ்வாறு துழாவிச் சமைக்கப்படும் உணவைத் துழவை என்றே பெரும்பாணாற்றுப்படை அழைக்கிறது.

துழவை
துழவை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Porridge, as stirred with a ladle, An oar of split bambu, rice or food serving(quantity: 1 ladle)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276

அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் உலரும்படி ஆற்றி

துழவை
துழவை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *