Skip to content

சொல் பொருள்

(வி)1. அசை,  2. ஆராய்ந்து பார், 3. தொங்கவிடு,  4. உயர்த்து, 5. உயர்த்திப்பிடி, 6. நிமிர்த்துவை,

2. (பெ) 1. தாள காலத்தில் முதல், இடை, கடை நிலைகளைக் குறிக்கும் பாணி, தூக்கு, சீர் ஆகியவற்றில் இடை நிலை, 2. ஏழுவகைத் தூக்குகளில் ஒரு தூக்கு, 3. ஆராய்ந்து பார்த்தல்

சொல் பொருள் விளக்கம்

1. அசை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

shake, agitate, cause motion, consider, reflect, investigate, hang, suspend, raise, hold up, make something stand erect, the middle order of a musical mode, called talam, one of the seven kinds of talam, examination

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் – நற் 107/4

வீசுகின்ற காற்று தூக்கி அசைத்ததால் இலையெல்லாம் உதிர்ந்துபோன நெற்றுக்கள்

நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் – பொரு 176,177

(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன்

ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன
நீடு இணர் கொன்றை கவின் பெற – அகம் 364/4,5

சிறந்த பொன்னாலான விளங்கும் அணிகளைத் தொங்கவிட்டாற் போன்ற
நீண்ட பூங்கொத்துக்களையுடைய கொன்றை அழகுபெற

கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல – குறு 8/4,5

கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல

பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து கன்னம் தூக்கி – ஐங் 245/1,2

பொய் உரைக்காத மரபினையுடைய நம் ஊரின் வயதான வேலன்
கழங்கினைப் போட்டுப்பார்த்து, நோய்தணிவதற்காக நேர்ந்த பொருளைத் தூக்கிப்பிடித்து

முரசு உடை செல்வர் புரவி சூட்டு
மூட்டு_உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/1,2

முரசங்களையுடைய செல்வரது குதிரையின் தலை உச்சியில்
இணைத்துத் தைத்த கவரியை நிமிர்த்து வைத்ததைப் போன்ற

தாளத்தை மூன்று கூறுகளாகப் பிரிப்பதுண்டு. எடுத்தல், விடுத்தல், தொடுத்தல் என்ற மூன்று காலப் பிரிவு
அவை. தாளத்தை முதலில் கொட்டுதலும், பிறகு இடையே கையை விடுத்தலும், மீட்டும் தொடுத்துக்
கொட்டுதலும் ஆகிய அந்த மூன்றையும் முறையே பாணி, தூக்கு, சீர் என்பார்கள்

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ – கலி 1/8-10

மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து,
பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடும்போது, மூங்கில் போன்ற அழகும், அணை போன்ற மெல்லிய தோள்களும்
வண்டுகள் ஒலிக்கும் கூந்தலும் உடைய இறைவி, தாளத்தின் இடையில் அமையும் தூக்கினைத் தருவாளோ?

செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயில் தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால் தூக்கு, நெடுந்தூக்கு
என்ற ஏழு வகைப்படும் தாளவகை

வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4

பல்வேறு குரலை உடையனவாகிய தாளத்தின் வழிப்படும் ஒரு தூக்கினையுடைய இனிய வாச்சியங்களைக் கொண்டு

நோக்கும்_கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார்
தூக்கு இலி – கலி 63/1,2

பார்க்கும்போது நம்மைப் பார்த்துத் தொழுகின்றான், அதனைப் பிறர் காண்பாரே
என்று சற்றும் ஆராய்ந்துபாராதவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *