சொல் பொருள்
தூசி – கிழிந்து நைந்து போன துண்டும் துணியும்.
தும்பு – அறுந்து போன நூலும், கழிந்துபோன பஞ்சும்.
சொல் பொருள் விளக்கம்
தூசு-துணி: தூசு என்பது தூசியாக நின்றது; கொடி பிடித்துப் போகும் படை தூசிப் படை எனப்படும். தூசியைக் கிளப்புவதால் அப்பெயர் வந்தது என்பது பொருந்தப் புனைதல். பொருளுடையதன்று. தும்பு – நூல், கயிறு, சணல்; கயிறு தும்பு தும்பாகப் போய்விட்டது; துணி தும்பு தும்பாக கிழிந்து விட்டது என்பவை வழக்காறுகள். தூசி துப்பட்டை காண்க.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்