சொல் பொருள்
தூர்த்தல் – பள்ளத்தை மூடி ஒப்புரவு செய்தல்.
பெருக்கல் – குப்பைகளைக் கூட்டித் துப்புரவு செய்தல்.
சொல் பொருள் விளக்கம்
கிணறு மேடுபட்டுப் போதலையும், காதில் உள்ள துளை மூடிப் போதலையும் தூர்ந்து போதல் என்பது வழக்கு. கிணற்றில் மேடிட்டுப் போதலை அள்ளுதலைத் தூர்வை வாரல் தூர்வை எடுத்தல் என்பதும் வழக்கே. பெருக்குதல் கூட்டுதல், திரட்டுதல் ஒன்று சேர்த்தல் என்பன வெல்லாம் ஒரே பொருளன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்