சொல் பொருள்
(வி) 1. தூவிவிடு, இறை, அள்ளிவீசு, 2. நிந்தி, பழிகூறு,
சொல் பொருள் விளக்கம்
தூவிவிடு, இறை, அள்ளிவீசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
throw up
defame, slander
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள ஊதை தூற்றும் உரவு நீர் சேர்ப்ப – நற் 15/1-3 முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி ஊதைக்காற்று தூவிவிடும் ஓயாது இயங்கும் கடற்கரைத் தலைவனே! அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் – கலி 3/1 அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் நிந்திக்கும் பழிச்சொற்களைக் கேட்க நாணியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்