சொல் பொருள்
தெத்தல் – வளைதல், கோணுதல்.
குத்தல் – நேராக இருத்தல் ஆகும்
சொல் பொருள் விளக்கம்
தெத்தல் = வளைதல், கோணுதல், சிலர் பல் வரிசைப் படாமல் வளைந்தும், சாய்ந்தும், நீண்டும், குறைந்தும், ஒழுங்கின்றி இருக்கும். அதனைத் தெத்தல் என்பர்; தெத்துப்பல் என்பதும் அது.
நேராக நிற்கும் கல், கம்பி முதலியவை குத்துக்கல், குத்துப் பாறை என வழங்கும். குற்றி என்பது கற்றூண். அது குத்தி ஆகியது. பற்றி என்பது பத்தியானது போல. ஆதலால் குத்தல் நேராக இருத்தல் ஆகும். ‘தெத்தலும், குத்தலும்’ என்பது ஒழுங்கு இல்லாமை; ஒரு சீராக இல்லாமை, உயரம் தாழ்வு ஆயவை என்பவற்றைக் குறிப்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்