தென்னவன் என்பதன் பொருள்பாண்டியன்
சொல் பொருள் விளக்கம்
பாண்டியன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Pandiyan, the ruler of the South
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும் தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர் – பரி 29/1,4 இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும் புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும் தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின் நான்மாடக் கூடலாகிய மதுரை. தென் திசை ஆண்ட தென்னவன் வாழி - சிலப்.மது 11/22 தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் - சிலப்.மது 11/54 தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் - சிலப்.மது 11/85 தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி - சிலப்.மது 13/18 தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து - சிலப்.மது 14/115 தீது தீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் - சிலப்.மது 15/9 தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற - சிலப்.மது 16/109 தொடி தோள் தென்னவன் கடிப்பு இகு முரசே - சிலப்.மது 17/164 செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப - சிலப்.மது 18/44 தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் - சிலப்.மது 19/20 மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி - சிலப்.மது 20/90,91 வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் - சிலப்.வஞ்சி 27/71 தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என - சிலப்.வஞ்சி 27/115 தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் - சிலப்.வஞ்சி 29/106
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்