சொல் பொருள்
தெரிப்பெடுத்தல் – கண்டுபிடித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு பொருள் களவு போய் விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்து காணலும் நாட்டுப்புறத்தில் இன்று மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய் மறைவைக் கண்டெடுத்தல் தெரிப்பெடுத்தல் என வழங்குகின்றது. இனிச் ‘சாமியாடிகள்’ சொல்வது கொண்டும் தெரிப்பெடுத்தல் உண்டு. தெரிவிக்கப்பட்ட அடையாளப்படி தெரிவிக்கப்பட்ட இடத்தில் தெரிவிக்கப்பட்ட பொருளை எடுத்தலே தெரிப்பெடுத்தலாக வழக்கில் உள்ளதாம். பலவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு ஏதோ ஒருவகையான் சரியாக இருப்பின் அதனைக்கொண்டே காலத்தை ஓட்டல் கண்டறியும் செய்தி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்