Skip to content
தெருள்

தெருள் –அறிந்து தெளி, நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி,அறிவுத்தெளிவு, உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், தெருண்டபெண்

1. சொல் பொருள் விளக்கம்

(வி) அறிந்து தெளி, நன்கு புரிந்துகொள்; தெளி; தெளிவு பெறு; ஐயமற அறி

(பெ) அறிவுத்தெளிவு, உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், தெருண்டபெண்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

wisdom, be clear, lucid

To know; to gain true knowledge;

knowledge, clarity of thought

arrive at puberty

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

அருள்‌ மேற்கொள்ளாதவன்‌ செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால்‌, அஃது அறிவு தெளியாதவன்‌ ஒரு நூலின்‌ உண்மைப்‌ பொருளைக்‌ கண்டாற்‌ போன்றது.

இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன்
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் – கலி 122/12,13

இருள் போன்ற கரிய கூந்தலையுடைய தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம் வருத்தத்தை அறிந்து தெளியும் குணம் இல்லாதவனாயிருப்பதை அறிவேன்.

வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/6,7

கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்,

தெருள் நடை மா களிறொடு தன் - புறம் 361/7

தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் - ஐந்70:35/3

நம்மாலே யாவர், இந் நல்கூர்ந்தார்; எஞ் ஞான்றும்

தம்மாலாம் ஆக்கம் இலர், என்று;
தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ தாமுந்
தெருண்ட வறிவினவர் - நாலடியார் 301

தானே பெரியவன் என்று கருதும் செல்வரிடத்து, தெளிந்த அறிவுடையார் செல்ல மாட்டார்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *