Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வருத்துதல், தண்டித்தல், 2. அழித்தல், 3. சினத்தல், 4. வெம்மை

சொல் பொருள் விளக்கம்

1. வருத்துதல், தண்டித்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

affliction, punishing, ruining, being angry, heat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சினனே காமம் கழி கண்ணோட்டம்
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/1-4

கோபம், காமம், மிகுந்த உவகை,
அச்சம், பொய்சொல்லல், பொருளின் மீது மிகுந்த பற்றுக்கொள்ளல்,
தண்டிப்பதில் கடுமை ஆகிய இவற்றோடு இவை போன்ற பிறவும் இந்த உலகத்தில்
அறவழியிலான ஆட்சிக்குத் தடைக்கற்கள் ஆகும்

அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1

பிறரால் அழிப்பதற்கு அரிய முறைமையினையுடைய கடவுள் காத்தலின்

வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17

வெம்மையான சினத்தலைக் கொண்ட ஞாயிற்றுடன் திங்களும் வலமாகத் திரிதலைச் செய்யும்

தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63

தீயினுள் சுடுகின்ற வெம்மை நீ! பூவினுள் கமழ்கின்ற மணம் நீ!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.