சொல் பொருள்
(பெ) ஒரு வகைக் காட்டு மரம்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைக் காட்டு மரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a jungle tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ 5 தாஅம் தேரலர்-கொல்லோ – நற் 302/4-6 வருகின்ற மழையை எதிரேற்று நிற்கும் நீல மணியின் நிறங்கொண்ட பெரிய புதரில் வெள்ளை நிறத்தில் பூத்த நல்ல பூங்கொத்துக்களையுடைய தெறுழமரத்தின் பூக்களைக் கண்டும் இது கார்காலம் என்று தாம் தெளிந்தாரில்லை போலும்; இந்தத் தெறுழம்பூ யானையின் முகத்தில் இருக்கும் புள்ளிகளைப் போல் இருக்கும். களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2 களிற்று முகத்தின்கண் புகர் போல தெறுழினது மலர் பூக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்