சொல் பொருள்
(வி.எ) 1. வருத்த, 2. அச்சம் உண்டாக, 3. சினம் உண்டாக,
சொல் பொருள் விளக்கம்
1. வருத்த,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
causing distress, causing fear, causing anger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தமியே கண்ட தண்டலையும் தெறுவர நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/4,5 என் மகளின்றி நான் மட்டும் தனியே சென்று பார்த்த சோலையும் வருத்திநிற்க, எனக்கு வருத்தம் உண்டாக்குகிறது மகளே தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/8-10 தன் தந்தையின் கண்ணின் அழகைக் கெடுத்ததாகிய தவற்றிற்காக, அச்சம் உண்டாக நெடுமொழியினையுடைய கோசர்களை கொல்வித்து தன் மாறுபாடு தீர்ந்த நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை அறியாது ஏறிய என்னை தெறுவர இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/7-9 நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே அதனை முரசு கட்டில் என்று அறியாது ஏறிப் படுத்த என்னை, சினம் உண்டாக இரு துண்டுகள் ஆக்கும் உன்னுடைய வாளின் வீச்சை மாற்றியதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்