சொல் பொருள்

(வி) 1. வருத்து, 2. சுட்டுப்பொசுக்கு, 3. வாட்டு, 4. குவி

சொல் பொருள் விளக்கம்

1. வருத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cause distress, burn, scorch, cause to dry, wither, heap

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301

முள்ளம்பன்றி வருத்தும்படி தவறுசெய்த குறவருடைய அழுகையும்

வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/1,2

மூங்கிலின் வனப்பை இழந்த தோள்களையும், வெயில் பொசுக்கியதால் அழகிய நலம் தொலைந்த நெற்றியையும் பார்த்து

வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14

வறட்சி வாட்டும்படியாகப் பெய்யாமற்போன மேகத்தைப் போலவும்

துடி இகுத்து
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/14,15

உடுக்கையினைத் தாழக் கொட்டி அரிய அணிகலன்களைத் திறையாகப்பெற்றுக் குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.