சொல் பொருள்
(பெ) பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,
சொல் பொருள் விளக்கம்
பாண்டியநாட்டிலுள்ளதோர் ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in the Pandiya country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஊரின் ஊரனை – ஐங் 54/1-4 திண்மையான தேரினையுடைய பாண்டியனின் நல்ல நாட்டில் உள்ள கோடைக் காலத்திலும் குளிர்ந்த நீர் வழிந்தோடும் தேனூரைப் போன்ற இவளின் தெரிந்தெடுத்த வளையல்கள் கழன்றுபோகுமாறு ஊரிலிருந்தும் சேரியில் வாழும் பெருமானே! கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி நயந்து நீ துறத்தலின் – ஐங் 55/1-3 கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும் தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூரைப் போன்ற இவளின் நல்ல அழகை விரும்பிப் பாராட்டிப் பின்னர் நீ இவளைத் துறந்து செல்வதால் பகலின் தோன்றும் பல் கதிர் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – ஐங் 57/1,2 பகலைப் போலத் தோன்றும் பல கதிர்களையுடைய வேள்வித்தீயையும், ஆம்பல் மலர்கள் உள்ள கொண்ட வயல்களையும் கொண்ட தேனூரைப் போன்ற இங்குக் குறிப்பிடப்படும் தேனூரின் வளத்தையொட்டி, இவ்வூர் மதுரையின் அருகே திருவேடகத்துக்கு அருகாமையிலுள்ள தேனூர் என்பர் ஔ.சு.து. தம் உரை விளக்கத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்