சொல் பொருள்
(பெ) 1. பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம், 2. தேனிறால், தேன்கூடு, 3. இனிய சாறு, 4. தேனீ, 5. மலர் மணம், இனிய நறுமணம்,
சொல் பொருள் விளக்கம்
பூக்களிலிருந்து தேனீக்கள்திரட்டும் இனிமையான திரவம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
honey, honey-comb, sweet juice, honey-bee, fragrance,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/2,3 பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல – நற் 1/4 சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல கானல் பெண்ணை தேன் உடை அளி பழம் – நற் 372/2 கடற்கரைச் சோலையின் பனையின் இனிய சாறினையுடைய மிக முதிர்ந்த பழம் மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1 மயில்கள் களித்தாட, கூட்டமான வண்டினங்கள் ஒலிக்க, தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9 மலர் மணம் கமழும் தலைமயிரையும் கொண்டவளே! நானும் ஒரு பாட்டு வாழ்த்திப்பாடுவேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்