சொல் பொருள்
(பெ) தவளை, தவளைவகை
சொல் பொருள் விளக்கம்
தவளை, தவளைவகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
frog, indian toad
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை தட்டைபறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3 சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள் தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன் வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட கார் தொடங்கின்றே காலை – ஐங் 468/1,2 வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க, கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்