Skip to content

சொல் பொருள்

(பெ) தவளை, தவளைவகை

சொல் பொருள் விளக்கம்

தவளை, தவளைவகை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

frog, indian toad

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டைபறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை – ஐங் 468/1,2

வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது குறித்த பருவத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.