தேள் என்பது ஒரு வகை பூச்சி
1. சொல் பொருள்
(பெ) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த ஒரு பூச்சி,
2. சொல் பொருள் விளக்கம்
தேள் (Scorpion) என்பது கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். அனைத்துத் தேளினங்களும் நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. வயது வந்த மனிதர்களுக்கு இவற்றின் கடிக்கு மருத்துவம் தேவையில்லை

மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16
தேளின் நஞ்சினைப் போன்று கடுக்கும் நாள்பட்ட கள்
இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர – கலி 110/3
கொட்டிய தேளுக்கு உடனே மருந்து போடுவது போன்றதோ உன் வேட்கைக்குத் தீனி போடுவது?

குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்