சொல் பொருள்
(வி.எ) தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை
தைஇய – இட்ட
தைஇய – போர்த்த
தைஇய – உருவாக்கிய
தைஇய – சேர்த்துத்தொடுத்த
தைஇய – உடுத்திய
தைஇய – பதிக்கப்பெற்ற
தைஇய – தடவிய
தைஇய – அலங்கரித்துக்கொண்ட
சொல் பொருள் விளக்கம்
தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24 திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129 தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின் வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222 வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8 வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5 உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன் சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17 சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற நார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47 குளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும் தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20 அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற, வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்