Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆரம்பித்தல், 2. ஆதிசிருஷ்டி, 

சொல் பொருள் விளக்கம்

ஆரம்பித்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

beginning, first creation

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டு
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/4,5

இறங்கிவரும் பெரிய மழை பெய்ய ஆரம்பித்ததால், அவர் நாட்டிலுள்ள
ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்

தொடங்கல்கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1

உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.