Skip to content

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. தொங்கவிடுதல், 2. பூக்கள் அல்லது இலைகள் தொடுத்த மாலை, 3. மணிகளைக் கோத்துச்செய்த மேகலை, 4.தொடுத்த மாலை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hanging, suspension

garland of flowers or leaves

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடலை வாளர் தொடுதோல் அடியர் – மது 636

தொங்குதல் (உள்ள)வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;

சுனை பூ குற்றும் தொடலை தைஇயும் – நற் 173/1

சுனையிலுள்ள மலர்களைக் கொய்தும், அவற்றை மாலையாகத் தொடுத்தும்

அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
ஒள் இலை தொடலை தைஇ – அகம் 105/1,2

அகன்ற பாறையில் அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கையின்
ஒள்ளிய இலைகளிலாலான மாலையினை அணிந்து

தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் – புறம் 339/6

மேகலை அணிந்த அல்குலையும் தொடி அணிந்த தோளையுமுடைய பெண்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.