சொல் பொருள்
தொட்டுக்கோ – எண்ணெய், கலத்தில் அறுவாகித் தொட்டுத் தேய்க்கும் அளவாக (இருத்தல்)
துடைத்துக்கோ- தொட்டுத் தேய்க்கும் அளவிலும் தீர்ந்து துடைத்துக் கொள்ளும் அளவாக (இருத்தல்)
சொல் பொருள் விளக்கம்
“எண்ணெய் தொட்டுக்கோ துடைத்துக்கோ என்று இருக்கிறது” என்பதில் இவ்விணைமொழியாட்சி யுள்ளது. வறுமையின் அடையாளமாக வழங்கும் வழக்கு இது. தொடுதலுக்கும் துடைத்தலுக்கும் வேறுபாடு வெளிப்படையே. தொடு தோல், தொடுவை என்பவற்றையும், துடைப்பம், கண் துடைப்பம் என்பவற்றையும் கருதுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்