சொல் பொருள்
தொங்குதல் – ஒரு கிளை வளைந்தோ ஒடிந்தோ தாழ்தல் தொங்குதலாம்.
தொடுக்குதல் – தொங்கும் கிளை கீழே வீழ்ந்து படாமல் தொடுக்கிக் கொண்டு இருத்தல் தொடுக்குதலாம்.
சொல் பொருள் விளக்கம்
தொங்கல், தொங்கட்டம் என்பவற்றால் தொங்குதல் பொருள் அறிக. தொடுவானம், தொடுகோடு, என்பவற்றால் தொடுக்குதல் பொருள் அறிக. ஆடு குழை தின்னவும் வேண்டும்; கிளை ஒடிந்து விழாமலும் இருக்க வேண்டும் என்பதற்கு ஆடு மேய்ப்பார் ‘அறாவெட்டு’ வெட்டுவர். அந்நிலையில் கிளை, தொங்கித் தொடுக்கிக் கொண்டு இருக்கும். ஆயன் வெட்டு ‘அறா வெட்டு’ என்பது பழமொழி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்