சொல் பொருள்

(வி) 1. கெடு, அழி,  2. சோர்வடை, தளர்ந்துபோ, 3. உழு, 

சொல் பொருள் விளக்கம்

கெடு, அழி, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

perish, be ruined, be weary, fatigued, plough

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 434,435

கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
(பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய;

தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14

அழுந்தூர்க்கண் எழுந்த சோர்வடையாத ஆரவாரத்திலும் பெரிது.

தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122

உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.