Skip to content

சொல் பொருள்

(வி) 1. செலுத்து, 2. தீர்த்துவிடு,  3. அழி, இல்லாமல்செய், 4. கொல்,

சொல் பொருள் விளக்கம்

  1. செலுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pay as debt or price, exhaust, cause to perish, kill

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி – பெரும் 140-142

(தன் சொல்)கேளாத மன்னருடைய காவலமைந்த நிலத்தே சென்று,
விடியற்காலத்து (அவர்கள்)பசுக்களைப் பற்றிக் கொணர்ந்து, (அவற்றைக்)கள்ளுக்கு விலையாகச் செலுத்தி
(தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு,

நீல பைம் குடம் தொலைச்சி நாளும் – பெரும் 382

நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளை முற்றாக உண்டு தீர்த்து

கடி காவின் நிலை தொலைச்சி – மது 153

காவலையுடைய பொழில்களின் நிலையை அழித்து

ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3

மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.