Skip to content

சொல் பொருள்

1. (வி.எ) செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம், 

2. (பெ) தோல்வியடைதல்,

சொல் பொருள் விளக்கம்

செய்பு எனும் வாய்பாட்டு வினையெச்சம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

verbal participle

getting defeated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5

என்னுடைய பண்டை அழகெல்லாம் தொலைய, இங்கு நான் துயர்ப்படும்படி, நம்மைத் துறந்து சென்றவர்

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 398

(பகைவரின்)படையின்கண் தோல்வியடைதலை அறியாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *