Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீட்டு வேலை செய்பவர்,  2. தொழிலாளிகள்

சொல் பொருள் விளக்கம்

வீட்டு வேலை செய்பவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

servants, labourers

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர்
கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக – நெடு 49,50

காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர்,
கருங்கொள்ளின் நிறத்தை ஒத்த நறுமண அம்மியில் பலவித நறுமணப்பெருள்களை அரைக்க;

நீர் தெவ்வு நிரை தொழுவர்
பாடு சிலம்பும் இசை ஏற்றத்தோடு – மது 89,90

நீரினை முகக்கும் (ஏற்றத்தில்)வரிசையாய் நிற்கும் தொழிலாளர்கள்
பாடுதலால் ஒலிக்கும் இசையும், ஏற்றத்(தோடு)

நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/6

நெற்கதிர் அறுக்கும் தொழிலாளர்களின் கூரிய அரிவாளால் அறுபட்டதனால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.