சொல் பொருள்
தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது
தோய்ந்த (புளிப்புடைய) மாவால் செய்யப்படுவது தோயை (தோசை) எனப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
தோய்ந்த மாவு கொண்டு சுடப்படும் பண்டம் தோயை > தோசை ஆயது. அதன் வடிவம் வட்டம். அவ் வடிவப் பெயர், ஆழ்வார்களுள் ஒருவராம் சக்கரத்தாழ்வாரைக் குறிப்பதாகக் கொள்வது மாலியர் வழக்கு. வியப்பான வழக்கு இல்லையா?
தோய்ந்த (புளிப்புடைய) மாவால் செய்யப்படுவது தோயை (தோசை) எனப்பட்டது. “தோயும் வெண்தயிர்” என்பது பால் தோய்தலை (புளித்தலை)த் தெரிவிக்கும். தோசை என்னும் வழுவழக்கின் செவ்விய வழக்காகிய தோயை என்பது குமரி மாவட்டத்தின் வழக்காக உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்