சொல் பொருள்
தோது = உதவியாக இருத்தல்
வாது = உதவியாக வாதாடுதல்
சொல் பொருள் விளக்கம்
அவனையும் கூட்டிக் கொண்டு போனால் ‘தோது வாதுக்கு’ உதவியாக இருக்கும் தனியாக ஒருவர் ஒரு செயலைச் செய்ய முடியும் எனினும்; தமக்காகப் பேச முடியும் எனினும் தோதுவாது; இருந்தால் ஒரு தென்பும், ஒர் உறுதியும் வாய்க்கும். ஆதலால் உதவத் தெரிந்த, பேசத் தெரிந்த ஒருவர் துணை வேண்டும் என்னும் வகையால் எழுந்த இணைச்சொல் இது. இனி எனக்குத் தோதுவாதுக்கு யார்வந்து உதவுவார் என்று வருந்துவார் பலர். எதற்கும் ஒற்றையாளுடன் மற்றோர் ஆளும் இருத்தல் துணிவை உண்டாக்கல் தெளிவு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்